Run & Bell& snow & Song

Pages

Tuesday, December 18, 2012

இதயம்..


இதயங்களைஇருவருமே பறிமாறிகொண்டோம் 
ஆனால் 
அவள் மட்டும் திருப்பி எடுத்து 
கொண்டாள் என் அனுமதி இன்றி... 

காதல்..


என் காதலை 
வெறும் வார்த்தைகளால் 
சொல்ல முடியாது 
என்பதால்தான் 
நான் இன்னும் 
நம் காதலை 
சொல்லாமல் 
வைத்திருக்கிறேன்

Friday, December 14, 2012

பெண்....


உன்னைப் பிரித்தெடுத்து 
உலகிற்கே கவிதை சொல்வேன் 
உனக்கே கவிதை என்றால் 
நான் எங்கே செல்வேன் பெண்ணே..

பூ..


நேற்று... 
செடியில் பூத்த வாசமிக்க மலராய்... 
இன்று... 
குப்பை தொட்டியில் காய்ந்த சருகாய்.. 

Thursday, December 13, 2012

காதலி..


எனக்காக தனது காதலை... 
கண்ணீருக்குள் புதைத்த 
எனது காதலியே 
என்றும் 
மென்மையானவள்...

Tuesday, December 11, 2012

நண்பன்..


என்னருகே 
நீ வந்து அமர்ந்தாய்... 
உனை தேற்ற உன் தாய் கொடுத்த 
ஒரே ஒரு மிட்டாயையும் 
தந்தாய் 
எனை தேற்ற... 

விழி...


வானத்தையே இருகூறாய் 
பிளக்கும் உன் 
மின்னல் விழிகள்.. 
என் இதயத்தில் 
பட்டால் என்னவாகும்???...