Run & Bell& snow & Song

Friday, November 30, 2012

நினைவு...


அடியோடு என்னை 
வெறுப்பது போல் 
நடிப்பவளே ....அறிவாயா.....? 
உன்னை 
நொடிப்பொழுதும் 
நினைக்க மறந்ததில்லை 
என் மனம். 

அவள்..

கடவுளைக் காண வந்த அவள் 
என் மனதை களவாடிச் சென்றாள்! 

சோகங்களைக் கரைக்கச் சென்ற இடத்தில் 
சொர்கத்தைக் கண்டு வந்தேன் ! 

காதல்...


ஒன்றுமில்லை ஒன்றுமில்லை 
என்று சொல்லி .... 
ஒன்றுமில்லாமல் போவது .. 
காதல் . 

Wednesday, November 28, 2012

காதல்...

சாஜகான் தாஜ்மஹால் 
கட்டியது மும்தாஜ்க்கு 
நான் கவிதை எழுதுவது 
என்னவளுக்காக...

வாழ்க்கை...

நினைத்த வாழ்க்கையை 
வாழ நினைக்கிறேன்
வாழ்வதற்கு 
என்னவள் என்னோடு இல்லை...

நினைவு....


உன் காதல் வாழ்க்கையை 
கொஞ்சம் தள்விட்டது
உனக்காக உன் நினைவுகளுடன்
மட்டும் வாழ்வேன்....

மனம்..


நிலவு இருக்கும் இடம் தூரம் என்று தெரித்தும் 
அதை 
அடையே நினைக்கிறது மனம்

Monday, November 26, 2012

காதல்..


நட்பு..


அற்பமான இதயத்தின் 
எண்ணங்களையும் 
சிற்பமாக்கும், 
உண்மையான நட்பு......

Sunday, November 25, 2012

அழகு..


ஒவ்வரு நாளும் விலை ஏறும் தங்கம் போல் 
ஒவ்வரு நொடியும் அவள் அழகு கூடுகிறது 
அவள் அழகுக்கு என்ன விலை என்று சொன்னால் 
என் உயிரை அடமானம் வைப்பேன்...

காதல்..


இருவரின் காதலும்  
உண்மையான காதலாக இருந்தால் 
அந்த மனங்கள்.. 
மரணத்தில் கூட சேரும்... 

மறதி....


நான் யார் என நானே கேட்கின்றேன் 
என்னை மறந்து நானே உன்னை நினைக்கின்றேன் 
காதல் எனும் பூஞ்சோலையில் 
மல்லிகையும் ரோஜாவும் மனக்கிறது 
அடிபட்டு அழியப்போவது தெரியாமல்

Friday, November 23, 2012

உணர்வு....

உன் கண்ணில் ஏனோ கண்ணீர்... 
அதனால் என் மனதில் ஏனோ வலி... 
நம்மில் ஓர் உணர்வு
இதுதான் காதலா ?..

கனம்.....


இதயத்தில் அவள் இருந்தாள் 
கனம் தெரியவில்லை ; 
இதயத்தை விட்டுச் சென்றாள் 
வெற்றிடமும் தெரிகிறது கனமாக 

Thursday, November 22, 2012

நினைவு...

உன்னிடம் ஆசையாய் பேசியது
ஒரு நிமிடம்..
என்னுள் நான் பேசிக் கொண்டது
ஒரு ஜென்மம்..

By:-Y.Sajeev

இசை..

என்னவளின் இன்னிசை மட்டும் 
இல்லையென்னறால்
நான் அன்றோ என்றோ 
இறந்திருப்பன்..

Sunday, November 18, 2012

மாற்றம்...

காதல் என்பது சத்தியம் 
கல்யாணம் என்பது நம்பிக்கை
நம்பிக்கையை மாற்று..
சத்தியத்தை மாற்றாதே...

Saturday, November 17, 2012

அன்பே..


நான் விக்கியபோது 
நான்தான் நினைக்கிறேன் என்றவளே , 
நான் அழும்போது மட்டும் 
எங்கே சென்றாய் அன்பே
உன்னைத்தேடி நான்..

Friday, November 16, 2012

அழகு...

மலர்களைக் கூட 
மலர துடிக்கின்றன
உன் அழகை காண்பதற்கு
 நீ உள்ளே..
எப்படி இரசிப்பது உன்னை
தவிப்புடன் நான்....

தவிப்பு....

நீ இல்லாத இரவுகள் 
என்னை வதைக்கின்றன .... 
நீ என்னோடு 
இருந்த பொழுதுகளை 
சொல்லி சொல்லி துடிக்கின்றது ...... 
ஒவ்வொரு நொடியும் இதயம்......!

பிரிவு...

கண்கள்கூட கவிதை பேசும்
உன்னை பார்க்கும் போது
கவிதைகூட கண்ணீர் சிந்தும்
உன்னை பிரியும்போது
அன்பே....

Thursday, November 15, 2012

நீ...


இடி போல் வந்து 
என் மனதை தாக்கி, 
மின்னல் போல் வந்து 
என் மனதை பறித்து, 
மழை போல் வந்து 
என் மனதை அடித்துச் சென்றவள்.

வேதனை...


எனக்குள்ள வேதனை நிலவுக்கும் தெரிந்திடும் 
நிலவுக்கும் ஜோடியில்லை

எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும்
 கால்கள் இல்லை 

உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம் 
அதிலே நீ யாரடி

சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி....

சுகமானது....

காதலித்தவர்களில் 
பலர் கூறினர் 
காதலிக்காதே காதல் என்பது வலி என்று, 

அந்த வலியும் சுகமானது என்று, 
உன்னை காதலித்த பிறகுதான் புரிந்துகொண்டேன்.

நிலவு...


ஒரு பௌர்ணமியில் 
உன் ஊருக்கு வந்திருந்தேன் . 
ஊரே இருட்டாக இருந்தது. 
விசாரித்தப்போது 
வெளிச்சத்துக்கு வந்தது 
நீ ஊரில் இல்லாத உண்மை .

காதல்...


அதிசயம்தான் 
காதல் கடிதத்தில் 
உதிர்ந்த மை 
உன் கண்களை 
அலங்கரித்தது 
என் காதலாக !

அன்பு...


Monday, November 12, 2012

தீபாவளி...

 தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் 
மணிகள் போலவே அசைந்தாடும் தீபமே
அது காலங்காலமாய் காதல் கவிதை பாடுமே
முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு
முத்து பொண்னு சிரிச்ச வெட்கத்துல
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்லை

உணர்வு..


இருதயம் அடிக்கடி 

இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில் 
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி 
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலித்துப்பார்....


காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி 
ஒளிவட்டம் தோன்றும்... 
உலகம் அர்த்தப்படும்... 
ராத்திரியின் நீளம் 
விளங்கும்.... 

உனக்கும் 
கவிதை வரும்... 
கையெழுத்து 
அழகாகும்..... 
தபால்காரன் 
தெய்வமாவான்... 

உன் பிம்பம் விழுந்தே 
கண்ணாடி உடையும்... 
கண்ணிரண்டும் 
ஒளிகொள்ளும்... 

காதலித்துப்பார் ! 

மெல்லினம்....


உன் முத்தத்தின் 
சத்தம் என்னவோ 
மெல்லினம் தான்..!
ஆனால் 
அது உண்டாக்கும் 
எதிரொலி தான் 
வல்லினம்..!

காதல்..


காற்றுள்ள வரை காதல் செய்வீர் 
உயிர் உள்ள வரை காதல் செய்வீர் 
உணர்வுள்ள வரை காதல் செய்வீர் 
இன்று மட்டும் அல்ல என்றுமே காதல் செய்வீர் .... 
எல்லோரும் காதல் செய்வீர் .... 

Saturday, November 10, 2012

தேவதை....


மலர்கள் எழுதாத 
மடல் அவள் ... 

பூக்கள் பூக்காத 
புன்னைகை அவள் ... 

நிலவுக்கு நிழல் 
கொடுத்தாள்... 

வானம் 
ஆசைப்படுகிறது 
அவள் மனதில் 
வசமாக .... 

பூக்கள் 
கேட்கிறது 
அவள் பார்வையில் 
மலர ... 

இதழ் மொழி 
கண்டு வானவில்லும் 
கண் சிமிட்டியது... 

சாரல் மழையில் 
அவள் சிரிப்பில் 
கூத்தாடியது மழைத்துளி ... 

மேகம் 
அலைபாயும் மாலை 
அவளை பார்க்க 
என் கண்கள் அலைபாயுதே ... 

நிலவு 
தோன்றும் 
இரவில் -என் 
இதயத்தில் உலா 
வருகிறாள் தேவதையாக ... 

கனவில் 
அவளை தேடும் 
நான் என்னை 
மறந்து விடுகிறேன் ...!

வேண்டும்..

கண்ணீரில்லா கவலை வேண்டும். 
என்னுள் நீ நிறைய வேண்டும். 
உன்னுள் நான் நீங்காமல் வேண்டும். 
நிலையில்லா காமம் வேண்டும். 
நிலைத்து நிற்கும் காதல் வேண்டும். 
நிறைந்து நிற்கும் நெஞ்சம் வேண்டும் 

Friday, November 9, 2012

நீ....

நீ வேண்டும்... 
மகிழ்ச்சியின் போது 
மனம் மகிழ 
நீ வேண்டும்... 
நானாக நானிருக்க 
அன்பே.. 
நீ எனக்கு 
ரகசிய நண்பனாய் வேண்டும் 
வருவாயா

ரோஜா...

உன் வீட்டு ரோஜா செடியும்
என்னைப்போலவே
தினம் ஒரு பூவை நீட்டி
தன் காதலை சொல்கிறது
நீ என் காதலி 
என்பதை அறியாமல்...!

Thursday, November 8, 2012

பெண்..


இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்.......

மாலை..


ஒரு மாலை நேரத்தில்,
மழை கொட்டும் மாதத்தில்,
அவள் நனைகையில் என் ஜீவன் கரைய கண்டேன்,
அவள் பெண்மை வளைத்து,
அதை நாலாய் மடித்து,
என் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துகொண்டேன்,
மழை நின்று பெண் எழவேஇல்லை..

மகிழ்ச்சி....

இரவினில் நிலவினில், 
முகநிழல் தெரியும்! 
அரைநொடி மணி கூட, 
துயில்-இன்றி மறையும்! 
மறுநாள் உனைநான், 
மறைவினில் கண்டால், 
மத்தாப்பு பூகம்பம் 
மனதுக்குள் வெடிக்கும் ! 

Tuesday, November 6, 2012

இதயம்...

இதயத்தை இரும்பாக தான் வைத்து இருந்தேன் … 
யாருக்கு தெரியும் அவள் காந்தமாக இருப்பால் என்று ...!
 Like

காதல்...

காதலுக்கு கண் இல்லை என்பது பொய். 
உனது கண்களை பார்த்த பிறகுதான் 
உன்னை காதலிக்கவே தொடங்கினேன் 

தென்றல்...


உன்னை தொடந்து வந்து 
சொல்ல நினைத்தேன்... 
என் காதலை உன்னிடம்... 
உன்னை தொடராமல் 
சொல்ல நினைத்து... 
தென்றல் அவளை 
தூது அனுப்பினேன்... 
சொன்னாளா என் காதலை 
உன்னிடம்... 


Sunday, November 4, 2012

தேடல்...என்னில் ஆயிரம்
முட்களில்லா ரோஜாக்களை
கண்டேன்...

என் கண் முன்னே...

உயிரே மீண்டும்
என்னை அழைப்பாயா...

உனக்குள் நானே..
உருகும் மெழுகாய்....
உன் வருகையை எதிர் நோக்கி..
நான்...

வானம்.....